சிறுமியின் கழுத்தில் இருந்த  தங்க நகை கொள்ளை!

மட்டக்களப்பு – ஞானசூரியம் சதுக்கப்பகுதில் உள்ள வீடு ஒன்றில் சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட தங்க நகையை கொள்ளையிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  மரம் ஏறும் தொழிலாளி பொலிசார் தெரிவித்தனர்.

தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும்  தொழிலாளி குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் கடந்த 12ம் திகதி சென்று தேங்காய் பறித்து தரவா என கேட்டடு அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி தோங்காய் பறித்துக் கொண்டிருந்துள்ளான்.

இந்த நிலையில் வீட்டின் தாயார் குளியலறைக்கு சென்று திரும்பிய நிலையில் குறித்த நபரை காணவில்லை என தேடிய போது, வீட்டினுள் சிறுமியின் கழுத்தில் இருந்த ஒரு பவுண் தங்கசங்கிலி அரை பவுண் கொண்ட இரு காப்புக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, கல்லடி வேலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

செய்திகள்