சாவகச்சேரிக்கு வர்த்தக அமைச்சர் திடீர் விஜயம்

சாவகச்சேரிக்கு வர்த்தக அமைச்சர் திடீர் விஜயம்

யாழ் மாவட்டத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மற்றும் கையிருப்புகள் தொடர்பாக ஆராய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள், சாவகச்சேரி சதோச விற்பனை நிலையத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர், குடாநாட்டின் வர்த்தக நிலவரங்களை ஆராயும் சந்திப்புகள் மற்றும் விஜயங்களில் இன்று (18)  ஈடுபடவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது, கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  அங்கஜன் இராமநாதன்,  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள்