மகனை தாக்கிய தந்தைக்கு ஒரு மாத சிறைத்தண்டனை.

மகனை தாக்கிய தந்தைக்கு ஒரு மாத சிறைத்தண்டனை.

குடிபோதையில் மகனைத் தாக்கிய தந்தை ஒருவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் கே.அரியநாயகம் நேற்று (16) ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

திருநெல்வேலி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய தந்தைக்கே இவ்வாறு சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
மது போதையில் வீட்டுக்கு வந்து 16 வயதுடைய தனது மகனை தாக்கியுள்ளார் என கோப்பாய் பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

காயங்களுக்கு உள்ளான மகன், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.வழக்கு விசாரணைகள் நிறைவு பெற்றிருந்த நிலையில் தந்தைக்கு மேற்படி சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

செய்திகள்