டாக்டர் பட்டம் பெற்று விஞ்ஞானி ஆன பிரபல நடிகை

டாக்டர் பட்டம் பெற்று விஞ்ஞானி ஆன பிரபல நடிகை

பிரபல தமிழ் சினிமா நடிகை வித்யா பிரதீப் விஞ்ஞானியாகத் தகுதி பெற்றுள்ளார். அவருக்குத் திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை வித்யா பிரதீப் பி.எச்டி முடித்து டாக்டராகியுள்ளார். மருத்துவத் துறையில் அசத்திவரும் வித்யா, திரைத்துறையிலும் சாதித்து வருகிறார்.

‘சைவம்’, ‘பசங்க 2’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை வித்யா பிரதீப். இதையடுத்து அருண் விஜய் நடிப்பில் உருவான ‘தடம்’ படத்தில் நடித்தார்.

பின்னர், சின்னத்திரையில் ‘நாயகி’ சீரியலில் நடித்து மக்கள் மக்களிடம் பிரபலமானார். இந்நிலையில், நடிகை வித்யா பிரதீப் தற்போது டாக்டர் பட்டம் பெற்று விஞ்ஞானி ஆகியுள்ளார்.

இத்தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்டெம் செல் பயாலஜியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


இதுகுறித்து வித்யா பிரதீப் கூறுகையில், “கடந்த பத்து வருடங்களாக நான் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். நான் சென்னைக்கு எந்த காரணத்திற்காக வந்தேனோ அது நிறைவேறிவிட்டது. தற்போது விஞ்ஞானியாகவும் ஆகிவிட்டேன்.

இதற்காக கடின உழைப்பைக் கொடுத்ததுடன் சில தியாகங்களையும் செய்துள்ளேன். இப்படி ஒரு இடத்திற்கு வந்திருப்பதன் மூலம் எனக்கான பொறுப்பு இன்னும் அதிகரித்து இருப்பதாக உணர்கிறேன்.

எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அறிவியலுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்

இந்தியா