சுவிஸ் நாட்டில் சிறப்புற நடைபெற்ற இசை, மிருதங்க மாணவர்களிற்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு.

சுவிஸ் நாட்டில் சிறப்புற நடைபெற்ற இசை, மிருதங்க மாணவர்களிற்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு.

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பெற்ற ஆசிரியர்தரத் தேர்வில் அறிமுறை, செய்முறைத் தேர்வுகளில் சித்தியடைந்திருந்த சுவிஸ் நாட்டு இசை, மிருதங்க மாணவர்களிற்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு கடந்த 12.03.2022 சனிக்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆசிரியர்தரத் தேர்விற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களிற்கும், அவர்களை ஊக்கமளித்து வழிநடத்திய பெற்றோர்களிற்கும், மாணவர்களிற்கு தமிழ்க்கலையினை சிறப்பாகக் கற்பித்த தமிழ்க்கலை ஆசிரியர்களிற்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் நிகழ்வு சிறப்புற நடைபெற முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கிய சுவிஸ் தழிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளர்கள், தமிழ்க்கலை ஆசிரியர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி. நாகராஜா விஐயகுமார்தேர்வுப்பொறுப்பாளர்

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்.

நம்மவர் நிகழ்வுகள்