யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சாதனை!!

யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சாதனை!!

2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தில் வந்து சாதனை படைத்துள்ளார் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன். இவர் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அந்நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,  எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவேன் எனவும்  நான் சூம் வகுப்பினூடாக எனது படிப்பினை மேற்கொண்டேன். எனது பெற்றோர் ஊக்கமளித்ததன் காரணமாகவும் எனது பாடசாலையின் வகுப்பாசிரியர் மற்றும் ஏனைய  ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாகவுமே  இந்த  வெற்றி கிடைத்தது எனக்கூறியுள்ளார். 

செய்திகள்