யாழில் பாடசாலை ஆசிரியரின் மோசமான செயலால் அதிரடிக் கைது

யாழில் பாடசாலை ஆசிரியரின் மோசமான செயலால் அதிரடிக் கைது

யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் உறவினர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர், சிகிச்சையின் பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மீசாலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரே மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டார்.

13 வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக ஆசிரியர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை சிறுவனை வீட்டிற்கு அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக மாணவனின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்