களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக (திங்கட்கிழமை)  நண்பகல் 12 யிலிருந்து ஒரு மணிவரையில் தாதியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வெறு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அமைச்சரவைப் பத்திரத்தை வழங்கு, திருத்தியமைத்த சம்பள முறைமையை தாதிய பட்டதாரிகளுக்கு வழங்கு, சம்பள முரட்பாட்டை நீக்கு, சுகாதார நிருவாக சேவையில் தொழில் வல்லுனர்களை உள்ளடக்கு, விசேட கடமைக் கொடுப்பனவை 10000 ரூபாயாக வழங்கு, பதவி உயர்வுகளை தாமதமின்ற வழங்கு உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை இதன்போது தாதியர்கள் ஏந்தியிருந்தனர்.

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய், மேலதிகநேர கொடுப்பணவை 1/80 ஆல் வழங்கு, சுகாதார நிர்வாக சேவையை உருவாக்கு, னுயுவு 3000 ரூபாவில் இலிருந்து 10000 ரூபா வரை அதிகரி, பட்டதாரி தாதியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கு, பதவி உயர்வுகளை 2010.11.01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்து. உள்ளிட்ட கோர்க்கைளை முன்வைத்தே தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பொலிசார் பாதுகாப்புக் கடடையில் ஈடுபட்டிருந்ததையும் அததானிக்க முடிந்தது.

Uncategorized