13ஆம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக வன்னி மண்ணெங்கும் அரசியல் விழிப்புணர்வு பரப்புரை

13ஆம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக வன்னி மண்ணெங்கும் அரசியல் விழிப்புணர்வு பரப்புரை

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ம் திருத்தத்தின் அடிப்படையில் தமிழருக்கான தீர்வை திணிக்கும் சதி முயற்சியை எதிர்த்து, தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியை கோரி, வன்னி மண்ணெங்கும்  தமிழ்த்   தேசிய மக்கள்  முன்னணியினால்  அரசியல் விழிப்புணர்வு பரப்புரை   முன்னெடுக்கப்பட்டது ​

தமிழர்களை புதைகுழிக்குள் தள்ளும்  13 எனும் அரசியல் தீர்வை  முற்றாக நிராகரித்து  தமிழர் தேசியத்தை  வலியுறுத்தி  13.03.2022 நாளை வவுனியாவில் நடைபெற இருக்கும்  பேரணியில்   தமிழர்கள்   அணிதிரண்டு  தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை   ஆகிய  சுதந்திர  பாதையில்   பயணிக்க வேண்டும் காலத்தின் தேவை இது. கலங்கி கிடக்கும் தமிழர் அல்ல நாம்.

செய்திகள் நிகழ்வுகள்