சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கும் இது கட்டாயமாகலாம்!

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கும் இது கட்டாயமாகலாம்!

சுவிட்சர்லாந்தில் இனி பெண்களும் கட்டாயமாக இராணுவத்தில் பணியாற்றும் சட்டம் கொண்டுவரப்படலாம்.

உக்ரைனில் போர் நடந்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்தின் மத்திய அரசாங்கம் இந்த வாரம் நாட்டின் இராணுவ சேவையை சீர்திருத்த முடிவு செய்தது. அதற்காக பல விருப்பங்களை அமைத்துள்ளது.

அதன்படி, 2024-ஆம் ஆண்டுக்குள், சுவிஸ் இராணுவத்தில் பெண்களும் கட்டாயமாக சேவை செய்யும் திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. உக்ரைனில் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த திட்டத்தின் வேலையை அரசு தொடங்கியது.

சுவிட்சர்லாந்தின் இராணுவ சேவையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பது சீர்திருத்தத்தின் முக்கிய உந்துதலாக உள்ளது. 4 மார்ச் 2022 அன்று, ஃபெடரல் கவுன்சில் தற்போதைய அமைப்பை சீர்திருத்த பல விருப்பங்களை அமைத்தது.

தற்போது, ​​சுவிட்சர்லாந்தின் ராணுவத்தில் சுவிஸ் ஆண்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு சில விதிவிலக்குகள் உள்ளன, சில சமயங்களில் அதற்கு பதிலாக சிவில் சேவை செய்ய வாய்ப்பு உள்ளது. சுவிஸ் பெண்கள் சேவை செய்ய வேண்டிய கடமை இல்லை. பெண்கள் தன்னார்வத் தொண்டு செய்யலாம், ஒரு சிலர் செய்து வருகின்றனர்.

தற்போதையை நிலை தொடர்ந்தால், 2030-க்குள் தேசத்தைப் பாதுகாக்கத் தேவையான 140,000 இராணுவ வீரர்களை எட்டமுடியாது. இந்த நிலையில், இராணுவத்தில் போதுமான பயிற்சி பெற்றவர்கள் இருப்பதை உறுதிப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு ஒரே வழி சுவிட்சர்லாந்தின் இராணுவத்தில் அதிக ஆட்களை சேர்ப்பது தான்.

இந்த வாரம், அரசாங்கம் பல சீர்திருத்த வகைகளை முன்வைத்தது: அவை, கட்டாய தேசிய பாதுகாப்பு சேவை(obligatory national security service), தேவைகளை அடிப்படையாகக் கொண்ட கட்டாய சேவை (obligatory service based on needs), கட்டாய குடிமக்கள் சேவை (obligatory citizens’ service) மற்றும் சேவை வகையின் விருப்பத்துடன் கட்டாய குடிமக்கள் சேவை (obligatory citizens’ service with a choice of type of service).

இதில் கடைசி மூன்று வகைகள், சுவிஸ் பெண்களுக்கு இராணுவ சேவையை கட்டாயமாக்குகிறது.

இந்த விஷயத்தில் அரசியல் விவாதங்கள் விறுவிறுப்பாக இருக்கின்றன. பெண்களை கடமையாற்றுவதை சிலர் எதிர்க்கின்றனர். இதற்கு எதிரானவர்கள் பெரும்பாலும் பாலின சமத்துவத்திற்காக வாதிடுபவர்களாக உள்ளனர். பொதுவாக, இராணுவ சேவை தொடர்பாக சுவிஸ் ஆண்களுக்கு எதிரான தற்போதைய பாகுபாடு இருப்பது போல், மற்ற துறைகளில் இருக்கும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு அதை ஈடுசெய்கிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர். 

உலகம்