ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!!

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!!

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவான் மேற்கு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 240 மில்லிகிராம் ஹெரோயினுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் தெல்லிப்பழை பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்திகள்