மீண்டும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி மரணம்

மீண்டும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி மரணம்

இந்தியாவில் காஷ்மீர், குரேஸ் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.இந்தியாவில் காஷ்மீர், குரேஸ் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் செக்டரில் உள்ள குஜ்ரன் நல்லா அருகே இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. இது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு மிக அருகில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பைலட் கொல்லப்பட்டார் மற்றும் துணை விமானி காயமடைந்தார்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் நோய்வாய்ப்பட்ட BSF வீரர்களை அழைத்துச் செல்வதற்காக சென்று கொண்டிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த துணை விமானி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயிர் தப்பியவர்களை Air Reconnaissance குழுக்கள் தேடி வரும் நிலையில், மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால், ஹெலிகாப்டர் தரையிறங்கவிருந்த நிலையில் வானிலை காரணமாக „தள்ளப்பட்டது“ என்று ஒரு அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா