இயக்குநர் பாலா – மனைவி விவகாரத்து!

இயக்குநர் பாலா – மனைவி விவகாரத்து!

சேது’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் சூர்யா நடித்த ’நந்தா’, விக்ரம், சூர்யா நடித்த ’பிதாமகன்’, ஆர்யா நடித்த ’நான் கடவுள்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா.  ‘நான் கடவுள்’ படத்தை இயக்கியதற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் சூர்யாவின் படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார்.

இந்த நிலையில் திடீரென இயக்குனர் பாலா தனது மனைவியை பிரிந்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார் என்பதும் 17 வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தற்போது சட்டபூர்வமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா சினிமா