லண்டனில் பதவியிழந்த   யாழ்ப்பாண மருத்துவர்!!

லண்டனில் பதவியிழந்த யாழ்ப்பாண மருத்துவர்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த எட்வின் சந்திர ஹரன் என்ற மருத்துவர், பிரிட்டன் வந்து தனது மேல் பட்டப் படிப்பை முடித்து NHSல் பெரும் பதவி வகித்து வந்தார். பல உயர் பொறுப்புகளில் இருந்து வந்த சந்திர ஹரன், தற்போது தடை செய்யப்பட்ட மருத்துவராக NHSல் அறிவிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களுக்கே வகுப்பு எடுக்கும் தகுதியில் இருந்த இவர், ஒரு முறை மாநாடு ஒன்று நடந்தவேளை தன்னுடன் வந்த பெண் மருத்துவரை, தனது ஹோட்டல் அறைக்கு வரும்படி கூறியுள்ளார். உங்களுக்கு ஸ்பெஷல் வகுப்பை என்னால் எடுக்க முடியும். என்னுடன் ஹோட்டல் அறைக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார். இதனை நம்பி அந்த பெண் மருத்துவர் சென்றவேளை. அங்கே மிக மிக கடுமையாக நடந்து கொள்வது போல, நாடகமாடிய சந்திர ஹரன், பல கேள்விகளை அந்த பெண் மருத்துவரிடம் கேட்டு, அவர் விடை சொல்லவில்லை என்ற உடனே அதற்கு தண்டனையாக ஆடைகளை களற்றும் படி கூறி அதட்டியுள்ளார். ஒரு கட்டத்தில்…..

ஒரு கட்டத்தில் உண்ணை ஆடையில்லாமல் பார்க்க எனக்கு உணர்ச்சி பொங்கி வருகிறது என்று ஆபாச வார்த்தைகளையும் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் மருத்துவர் கொடுத்த முறைப்பாட்டை, மருத்துவ கவுன்சில் மற்றும் தொழில் சார் கவுன்சில் ஆகிய 2 அமைப்புகள் விசாரனை செய்து வந்தது. விசாரணையின் முடிவில் மருத்துவர் சந்திர ஹரன் குற்றவாளி என்று நிரூபனமாகியுள்ளது. இதற்காக அந்த பெண் மருத்துவர் சில ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனை அடுத்து பெரும் பதவி வகித்து வந்த சந்திர ஹரனை மருத்துவ கவுன்சில் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது .

உலகம்