புதுக்குடியிருப்பு பகுதியில்  மீண்டும்  வெடித்த எரிவாயு அடுப்பு

புதுக்குடியிருப்பு பகுதியில் மீண்டும் வெடித்த எரிவாயு அடுப்பு

முல்லைத்தீவு–புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் மஞ்சள் எரிவாயுவை பயன்படுத்தியவர்களின் எரிவாயு அடுப்பு ஒன்று நேற்று இரவு(05) வெடித்துள்ளது.

குறித்த எரிவாயு சிலிண்டர் எடுத்து பத்து நாட்கள் ஆகிய நிலையில், நேற்று அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

அடுப்பு வெடித்துள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு காவல் துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் காவல் துறையினர் வந்து சம்பவத்தை பார்வையிட்டுள்ளனர்.

எரிவாயு வாங்கிய கடைக்கு தெரியப்படுத்தி சம்மந்தப்பட்ட முகவர் நிறுவனத்திற்கும் அறிவித்து அவர்களும் வந்து பார்வையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

செய்திகள்