ஆர்த்தியின் கணவரை தேடும் பொலிஸார்.

ஆர்த்தியின் கணவரை தேடும் பொலிஸார்.

பிரபல நகைச்சுவை நடிகர் கணேஷ்கரை போக்குவரத்து பொலிசார் தேடி வருகின்றனர். சாலையில் உள்ள தடுப்பில் காரை மோதி விட்டு தப்பி சென்றதாக கூறப்படும் சம்பவத்தில் அவர் பொலிசாரால் தேடப்பட்டு வருகிறார்.

நேற்று இரவு பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் அவரது ஹோண்டா ஜேஸ் காரை மோதி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவரும் கட்டுப்பாட்டை இழந்து கணேஷ்கரின் காரில் மோதி கீழே விழுந்துள்ளார்.

சத்தம் கேட்டு மக்கள் திரண்டதும் கணேஷ்கர் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது. கணேஷ்கர் வீட்டிற்கு வரவில்லை என அவரது மனைவி ஆர்த்தி பொலிசாரிடம் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் அவரை விடிய விடிய மருத்துவமனைகளில் தேடி அலைந்தனர்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற நடிகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா சினிமா