அமெரிக்காவில் உக்ரைனியர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு

அமெரிக்காவில் உக்ரைனியர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு

அமெரிக்காவில் உள்ள உக்ரைனியர்களுக்கு 18 மாதங்கள் தங்கி கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உக்ரைனின் பல நகரங்கள் ரஷ்யப் போரால் அழிக்கப்பட்டன. அங்கிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் அண்டை நாடுகளுக்கு படையெடுத்தனர். இந்த நெருக்கடியான கட்டத்தில் அமெரிக்காவில் உள்ள உக்ரைன் குடிமக்களுக்கு ஜோ பிடன் நிர்வாகம் நிவாரணம் வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி அலெஜான்ட்ரோ என். மயோர்கஸின் அறிக்கையில்,

“உக்ரேனியர்கள் தற்காலிக பாதுகாப்பு எனப்படும் கூட்டாட்சி திட்டத்தின் கீழ் 18 மாதங்கள் அமெரிக்காவில் தங்கலாம், மேலும் இந்த பாதுகாப்பிற்கு தகுதிபெற தனிநபர்கள் குறைந்தது ஒரு மாதமாவது அங்கு இருந்திருக்க வேண்டும். „

அமெரிக்காவில் இத்திட்டத்தின் மூலம் 30,000 உக்ரைனியர்கள் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

உலகம்