மாத்தறையில் பாலம் உடைந்து விழுந்ததில் பதற்றம்!!

மாத்தறையில் பாலம் உடைந்து விழுந்ததில் பதற்றம்!!

நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டிருந்த பாலம் ஒன்று மாத்தறையில் திடீரென உடைந்து விழுந்துள்ளது.

மாத்தறை பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பலகையில் செய்யப்பட்டுள்ள பாலம் ஒன்று இன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

விகாரைக்கு மக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.எனினும் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலின் குறுக்கே விகாரைக்கு செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலம் பொது மக்களுக்களுடன் சேர்ந்து இடிந்து விழுந்தமையினால் உதவுமாறு மக்கள் கத்தி கூச்சலிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

செய்திகள்