விஜய் சேதுபதிக்கு வெளிநாட்டில் கிடைத்த கெளரவம்.

விஜய் சேதுபதிக்கு வெளிநாட்டில் கிடைத்த கெளரவம்.

இந்தியாவில் பாப்புலர் ஆக இருக்கும் பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தொடர்ந்து கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகிறது. பிரபல ஹிந்தி நடிகர்கள் தொடங்கி மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் வரை அந்த கௌரவத்தை பெற்று இருக்கின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து திரிஷா, நடிகர் பார்திபன், அமலா பால் உள்ளிட்டோரும் கோல்டன் விசா பெற்று இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டு இருக்கிறது.

UAE அதிகாரிகளிடம் இருந்து விஜய் சேதுபதி கோல்டன் விசா பெறும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சினிமா