பகலிலும் எரியும் வீதி விளக்குகள்

பகலிலும் எரியும் வீதி விளக்குகள்

நாட்டில் மின்சார நெருக்கடியால் தினமும் நாடு முழுவதும் 5 மணித்தியாலத்துக்கு அதிகமான நேரங்கள் மின்துண்டிக்கப்படுகின்ற நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எனினும் கண்டி- டீ.எஸ். சேனநாயக்க வீதியில் பகல் வேளைகளிலும் வீதி விளக்குகள் எரிந்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கண்டி நகர ஆணையாளர் இசான் விஜேதிலகவிடம் வினவிய போது, குறித்த வீதியின் மின் விளக்குகளை நிர்வகிப்பது மின்சார சபையினர் என தெரிவித்தாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் , இந்த விடயம் தொடர்பில் மின்சார சபையின​ரை தெ ளிவுப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மக்கள் மின்வெட்டால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கையில் , இவ்வாறு வீதிவிளக்குகளை பகலில்  எரியவிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

செய்திகள்