தென்னிலங்கையில் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி

தென்னிலங்கையில் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி

தென்னிலங்கையில் வறுமையின் காரணமாக பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் தந்தை ஒருவரை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

களுத்துறை, வெலிபென்ன பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான நாகராஜா ரஞ்சன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வினை செய்ய முடியாத நிலையில் குடும்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக நூற்று 20 ரூபாய் வட்டி என கணக்கில் மனைவி பணம் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மலர்சாலைக்கு 17,500 ரூபாய் வழங்குவதற்காக அவர் இந்த பணத்தை வட்டிக்கு பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சடலத்தை வீட்டிற்கு கொண்டு வர முடியாதென்பதனால் மலர் சாலைக்கு இந்த பணம் வழங்கப்பபட வேண்டும். அதற்காக நூற்றுக்கு 20 ரூபாய் என்ற கணக்கில் வட்டிக்கு பணம் பெற்றதாக உயிரிழந்த நாகராஜன் ரஞ்சனின் தாயாரான ருக்மனி நாகொட வைத்தியசாலையில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

செய்திகள்