உக்ரைன் போரில்  ரஷிய வீரர்கள் 6,000 பேர் கொல்லப்பட்டனர்!!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷிய போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் உக்ரைன்-ரஷியா இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததால் ரஷிய படைகள் தாக்குதல் வேகத்தை சற்று குறைத்திருந்தது. ஆனால் எந்தவித ஆக்கப்பூர்மான முடிவுகளும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா இன்று தீவிரப்படுத்தியது. ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்த தனது படைகளுக்கு ரஷியா உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ரஷிய படைகள் முழு வீச்சில் தாக்க தொடங்கி உள்ளன.

அதன்படி உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரில் இன்று காலை முதலே ரஷிய படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின. ஒரு போர் விமானங்கள் குண்டுகளை வீச, மற்றொரு புறமும் போர் கப்பல்களில் ஏவுகணைகள் பாய்ந்தன. கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதிகளையொட்டி அமைந்துள்ள அரசு கட்டிடம் ஒன்றின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஏவுகணை வீச்சில் அரசு கட்டிடமும், அருகில் உள்ள குடியிருப்புகளும் சின்னாபின்னமாகின.

தற்போது ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்  பகுதிக்குள் நுழைந்துள்ளது. கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷிய படைகள் அங்குள்ள ஒரு மருத்துவமனையை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது ரஷிய படைகள் கார்கிவ் பகுதியில்  உள்ள போலீஸ் தலைமையகத்தை ரஷியா ராக்கெட்டின் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.

111

அந்த கட்டிடம் ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில், தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் ராணுவ நிர்வாகம், மக்கள் பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழலில் உக்ரைனின் கெர்சன் நகர் பகுதி முற்றிலும் ரஷிய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த பகுதி கவர்னர் தெரிவித்துள்ளார். கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் , துறைமுகங்கள் நிறைந்த கெர்சன் உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரமாகும். சுமார் 3 லட்சம் மக்கள் தொகையுடைய கெர்சன் நகரில் 20 சதவீத ரஷிய நாட்டினர் வசித்து வருகின்றனர்.

இதனிடையே உக்ரைனின் பல நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து கடுமையாக தாக்கி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் கீவில் ரஷிய படைகள் முழு வீச்சில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகரை கைப்பற்றும் நோக்கில் அங்கு ரஷியா கூடுதலாக படைகளை திரட்டி வருகிறது.

இப்படி போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருவதால் நாடு முழுவதும் மக்கள் உயிருக்கு பயந்து சுரங்கபாதை ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட நிலத்தடி சுரங்களில் பதுங்கியுள்ளனர். அதே வேளையில் ரஷிய படைகளின் உக்கிரமான தாக்குதல்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்  கடந்த 6 நாட்களாக உக்ரைன் மீது நடைபெற்று வரும் போரில் ரஷிய வீரர்கள் 6,000 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.உக்ரைன் நாட்டின் மீதான ரஷிய போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் உக்ரைன்-ரஷியா இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததால் ரஷிய படைகள் தாக்குதல் வேகத்தை சற்று குறைத்திருந்தது. ஆனால் எந்தவித ஆக்கப்பூர்மான முடிவுகளும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா இன்று தீவிரப்படுத்தியது. ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்த தனது படைகளுக்கு ரஷியா உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ரஷிய படைகள் முழு வீச்சில் தாக்க தொடங்கி உள்ளன.

அதன்படி உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரில் இன்று காலை முதலே ரஷிய படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின. ஒரு போர் விமானங்கள் குண்டுகளை வீச, மற்றொரு புறமும் போர் கப்பல்களில் ஏவுகணைகள் பாய்ந்தன. கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதிகளையொட்டி அமைந்துள்ள அரசு கட்டிடம் ஒன்றின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஏவுகணை வீச்சில் அரசு கட்டிடமும், அருகில் உள்ள குடியிருப்புகளும் சின்னாபின்னமாகின.

தற்போது ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்  பகுதிக்குள் நுழைந்துள்ளது. கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷிய படைகள் அங்குள்ள ஒரு மருத்துவமனையை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது ரஷிய படைகள் கார்கிவ் பகுதியில்  உள்ள போலீஸ் தலைமையகத்தை ரஷியா ராக்கெட்டின் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.

அந்த கட்டிடம் ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில், தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் ராணுவ நிர்வாகம், மக்கள் பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழலில் உக்ரைனின் கெர்சன் நகர் பகுதி முற்றிலும் ரஷிய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த பகுதி கவர்னர் தெரிவித்துள்ளார். கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் , துறைமுகங்கள் நிறைந்த கெர்சன் உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரமாகும். சுமார் 3 லட்சம் மக்கள் தொகையுடைய கெர்சன் நகரில் 20 சதவீத ரஷிய நாட்டினர் வசித்து வருகின்றனர்.

இதனிடையே உக்ரைனின் பல நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து கடுமையாக தாக்கி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் கீவில் ரஷிய படைகள் முழு வீச்சில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகரை கைப்பற்றும் நோக்கில் அங்கு ரஷியா கூடுதலாக படைகளை திரட்டி வருகிறது.

இப்படி போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருவதால் நாடு முழுவதும் மக்கள் உயிருக்கு பயந்து சுரங்கபாதை ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட நிலத்தடி சுரங்களில் பதுங்கியுள்ளனர். அதே வேளையில் ரஷிய படைகளின் உக்கிரமான தாக்குதல்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்  கடந்த 6 நாட்களாக உக்ரைன் மீது நடைபெற்று வரும் போரில் ரஷிய வீரர்கள் 6,000 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.

உலகம்