முல்லைத்தீவு சாலைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு மீட்பு!

முல்லைத்தீவு சாலைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு மீட்பு!

முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் தற்ககொலை தாக்குதல் படகு ஒன்று இன்று 28.02.2022 மீட்கப்பட்டுள்ளது.

சாலைப்பகுதியில் கடற்கரையில் புதைந்து கிடந்த படகு குறித்து இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த படகு இனம் காணப்பட்டுள்ளது.

சாலைப்பகுதியில் வாடி அமைத்து தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் நிலத்தில் புதைந்த படகினை மீட்டு இரண்டாக வெட்டியபோது படகிற்குள் வெடிபொருட்கள்பொருத்தப்பட்டிருப்பது இனம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற படையினர் படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல்வழங்கியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் தலைமையிலான குழுவினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடன் படகினை மீட்டுள்ளார்கள்.

படகில் பொருத்தப்பட்டிருந்த பெருமளவான வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டு குறித்த வெடிபொருட்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தகர்த்து அழிக்கப்படவுள்ளது.

செய்திகள்