தடையை மீறி கனடாவுக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்

தடையை மீறி கனடாவுக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்

தடையை மீறி கனேடிய வான்பரப்பிற்குள் ரஷ்ய வர்த்தக விமானம் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் எரோஃப்ளோட் (Aeroflot) நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவின் விமானங்கள் தமது வான்வெளிக்குள் நுழைய கனடா அண்மையில் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

உலகம்