சுவிஸில் சாதனை படைத்த ஈழத்துச் சகோதரிகள்!!

சுவிஸில் சாதனை படைத்த ஈழத்துச் சகோதரிகள்!!

சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் தாயகத்தில்  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளின் துயர் துடைக்கும் முகமாகவும் அனைத்து கலைஞர்களையும் ஊக்கப்படுத்தும் முகமாகவும் நேற்று முந்தினம் பாடல் போட்டி நடாத்தப்பட்டது.

இரண்டு பிரிவுகளாக இடம்பெற்ற  போட்டிகளில் கீழ் பிரிவில் செல்வி கனிஷா பாலகுமரன்  முதல் இடத்தைப் பிடித்து „இளங்கானக்குயில்“பட்டத்தினையும்  

மேல் பிரிவில் திருஷா பாலகுமரன்  வெற்றி பெற்று „கானக்குயில்“ பட்டத்தினையும் பெற்றுக்கொண்டனர். 

லுட்சேர்ன் மாநிலத்தில் வசிக்கும் மதி – பாலகுமரன் தம்பதிகளின் புதல்விகளான இவர்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் பாடகிகளாவர்.  சகோதரிகள் இருவரினது  குரல்களிலும் பல பாடல்கள் இசை அல்பங்களில்  வெளிவந்துள்ளன.

  இப்போட்டி  நான்காவது தடவையாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நம்மவர் நிகழ்வுகள்