ரஷ்யாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உக்ரைன்.

ரஷ்யாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உக்ரைன்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உக்ரைனில் ரஷ்யப் படைகள் இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அமைச்சரகம் தெரிவித்திருந்தது.

ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது. இதனால் உக்ரைனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா நேற்று உத்தரவிட்டது.

அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

இந்த நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்காக, பெலாரஸ் நாட்டில் உள்ள ஹோமலுக்கு ரஷ்ய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷ்ய மாளிகை கிரம்ளின் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ரஷ்யாவின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மீண்டும் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளமை ரஷ்யாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனை ரஷ்ய இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில் இப்படியான அறிவிப்பு பலராலும் வியப்பாக பார்க்கப் படுகிறது.

உலகம்