நாட்டுக்காக போராட வந்தால் ஆயுதம் தருவோம்!

நாட்டுக்காக போராட வந்தால் ஆயுதம் தருவோம்!

உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறிய ரஷ்யப் படைகளை தமது நாட்டு இராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகவும், பயங்கரமான சண்டையின் பின்னர் தலைநகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக போராட எண்ணுபவர்களுக்கு ஆயுதம் வழங்க உக்ரைன் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் இராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு நான் கூறவில்லை. நான் இங்கேதான் இருப்பேன். எங்கேயும் ஓடிவிடமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம்