மரணத்தின் பின்னரும் வாழும் வவுனியா இளைஞன்

மரணத்தின் பின்னரும் வாழும் வவுனியா இளைஞன்

இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட இரத்தக் குளாய் வெடிப்பால்,உள்ளகக் குருதிப் பெருக்குக்கு உள்ளாகி மரணித்த வவுனியா இளைஞனின் உடல் இன்று 25.02.2022 வெள்ளிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.ஆசிரியர் அமரர் சிவபாலன் அவர்களின் மகன் அமரர் சி. சிவரூபன் அவர்கள் தனது இரு சிறுநீரகங்களுள்ளிட்ட உடலுறுப்புகளைத் தானமாக வழங்க ஒப்புதல் அளித்திருந்தமைக்கு இணங்க , அன்னாரின் சிறுநீரகங்கள் மற்றும் உடற் பாகங்கள் வைத்தியசாலை சத்திரசிகிச்சை பிரிவில் வைத்துப் பெற்றுக் கொள்ளப்பட்டன!அவற்றால் தனது மரணத்தின் பின்னரும் பலரை வாழ வைத்த பெருமையைப் பெறும் அமரர் சிவபாலன் சிவரூபன் அவர்கள் “செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி” வள்ளலைப் போலானார்.

செய்திகள்