உக்ரைனின் மனிதப் பேரவலத்தை சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்!

உக்ரைனின் மனிதப் பேரவலத்தை சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என பிரித்தானியாவின் கென்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவுக் குழுவின் தலைவருமான Tom Tugendhat குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் மனிதப் பேரவலத்தை, சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்” பிரித்தானியாவின் கென்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவுக் குழுவின் தலைவருமான Tom Tugendhat, உக்ரைனில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் காட்சிகளை „ஒரு மனித சோகம்“ („a human tragedy“.) என விபரித்திருக்கிறார்.

உண்மைதான் Tom. யுத்தம் எவ்வளவு கொடியது. கொத்துக்கொத்தாக மக்கள் இடம்பெயர்க்கப்படுவதும், வாழ்விடங்களை விட்டு, அவர்கள் தமது குழந்தைகள், செல்லப்பிராணிகளுடன் நகர்வதும், போரில் கேட்பாரின்றி அனாதைகளாக மடிவதும் எவ்வளவு மனிதப் பேரவலம் என்பதை, நீங்கள் எல்லோரும் பார்த்திருக்க, நாம் அனுபவித்தோம் Tom.

அந்த துயர் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறையப் போவதில்லை. அந்தக் கொடுமையை, உக்ரைனின் அப்பாவி மக்கள் மட்டும் அல்ல உலகில் யுத்தங்களை எதிர்கொள்ளும் எந்த மக்களும் அனுபவிக்கக் கூடாது.

ஆதிக்கப் போட்டிகளுக்கும், சாம்ராஜ்ய விரிவாக்கலுக்கும், வளச் சுறண்டல்களுக்கும், நில, பொருளாதார ஆக்கிரமிப்புகளுக்கும், இன, மத, காலாசார மேலாதிக்கங்களை நிறுவுவதற்காகவும், ஒவ்வொரு கணமும் உலகில் மக்கள் மரித்துக் கொண்டிருக்கும் நிலை மாற வேண்டும்.

ரஸ்ய உக்ரைன் போர் ஒரு 3ஆம் உலகப் போராக மாறுவதனை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். உலக அமைதியை நோக்கி, யுத்தமில்லா வாழ்வை நோக்கி உலகம் ஒன்றுபட வேண்டும்.

நடராஜா குருபரன்….

உலகம் செய்திகள்