நீர்கொழும்பு எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை!

நீர்கொழும்பு எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை!

நீர்கொழும்பு எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக முகாமையாளர் கூறியதை அடுத்து , முகாமையாளருக்கும் எரிபொருளை பெற சென்றவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றநிலையில் தோன்றியதாக கூறப்படுகின்றது.

நாடாளாவிய ரீதியில் எரிபொள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நீர்கொழும்பு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் விநியோகிக்கப்பட்டது.

இதன்காரணமாக அங்கு நீண்ட வரிசை காணப்பட்டதுடன் டீசலை பெற்றுக்கொள்வதற்காக அதிக எண்ணிக்கையானோர் கலன்களை எடுத்து வந்திருந்தனர். அதுமட்டுமல்லாது வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றிருந்தன.

இந்நிலையில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக அங்கு இருந்தவர்களிடம் முகாமையாளர் கூறியதை அடுத்தே, முகாமையாளருக்கும். எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக கலன்களுடன் வந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

அதன் பின்னர் அங்கு சுமூக நிலையை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் டீசல் விநியோகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து நீர்கொழும்பு போக்குவரத்து பொலிஸார் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

செய்திகள்