திருமண நிகழ்வில்  14 பேர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்

திருமண நிகழ்வில் 14 பேர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்

இந்தியாவின் உத்தரகாண்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

உத்தரகாண்டின் போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் திருமண நிகழ்விற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது இன்று அதிகாலை சம்பவத் மாவட்டம் அருகே உள்ள, சுக்கிதங்க் மலை பகுதியில் எதிர்பாராதவிதமாக வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்தது.

படுகாயமடைந்த வாகனத்தின் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விபந்து நடந்த பகுதிக்கு விரைந்தனர்.

மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொண்ட போதும், 14 பேர் உயிரிழந்ததாக, குமோன் பகுதி டிஐஜி நிலேஷ் ஆனந்த் பானே தெரிவித்துள்ளார்.

இந்தியா