வெளிநாடொன்றில் இரு இலங்கையர்கள் பலி

வெளிநாடொன்றில் இரு இலங்கையர்கள் பலி

ருமேனியா – ஹொரியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிலியந்தலையைச் சேர்ந்த அசேல பண்டார (42) மற்றும் பேருவளையைச் சேர்ந்த கயான் சம்பத் (39) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் வீதியோரமாக நடந்துசென்றுகொண்டிருந்தபோது, எதிரில் வந்த மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து அவர்களை மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ருமேனியாவில் பணியாற்றிவந்த இலங்கையர்கள் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்தள்ளது.

உலகம் செய்திகள்