யாழில் இருந்து முல்லைத்தீவு சென்ற பெண் உள்ளிட்ட 13 பேர் அதிரடிக் கைது

யாழில் இருந்து முல்லைத்தீவு சென்ற பெண் உள்ளிட்ட 13 பேர் அதிரடிக் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு வன்முறையில் ஈடுபட சென்ற பெண் உள்ளிட்ட 13 பேர் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் மினிவான் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி கீரிமலை பகுதியை சேர்ந்த பெண் உள்ளிட்ட 13 பேர் முல்லைத்தீவு அளம்பில் பகுதிக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டள்ளனர்.

குறித்த கும்பலின் தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். வாகனம் ஒன்றினில் வந்த கும்பல் தமது பகுதியில் தாக்குதலை மேற்கொண்டு 5 பேரை படுகாயங்களுக்கு உட்படுத்தி விட்டு தப்பி செல்வதனை அறிந்த ஊரவர்கள் வானை துரத்தி சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசாரிடம் வாகனத்துடன் அதில் இருந்த 13 பேரையும் ஊரவர்கள் ஒப்படைத்துள்ளனர். தனிப்பட்ட பகை காரணமாகவே யாழில் இருந்து வாகனத்தில் முல்லைத்தீவு சென்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவருந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

செய்திகள்