பருத்தித்துறை சுப்பர்மட மக்களின் முதுகு புண்ணாகும் -டக்ளஸ்

பருத்தித்துறை சுப்பர்மட மக்களின் முதுகு புண்ணாகும் -டக்ளஸ்

பருத்தித்துறை சூப்பர் மடத்தில் உள்ளவர்களோடு நான் கதைக்க போனால் அவர்களது உடம்புதான் புண்ணாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று மானிப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களின் கொத்தணியின் பிரதான அலுவலகத்திற்கான கட்டடத்தை திறந்து வைத்தபின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுப்பர் மடம் என்ற பெயரை ஏளனம் செய்வது போல „சூப்பர் மடம்“ என்று கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சூப்பர் மடத்தில் உள்ளவர்கள் அன்றையதினம் குடித்துவிட்டு வெறியில் கூத்தடிக்கும்போது நான் அவ்விடத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்தேன். அப்போது ஒரு ஊடகவியலாளர் “ ஏன் நீங்கள் திரும்பிச் செல்கின்றீர்கள்?“ என என்னைக் கேட்டார்.

அதற்கு நான் „இங்கு உள்ளவர்கள் குடித்துவிட்டு வெறியில் கூத்தடிக்கின்றனர். எனவே நான் அவர்களுடன் பேசினால் அவர்களது முதுகுதான் வீணாக புண்ணாகும்.

ஏனெனில் குடித்துவிட்டு வெறியில் சூப்பர் மடத்தில் நின்று கூத்தடிப்பவர்கள் என்னுடன் முரண்பட்டால் என்னுடன் வந்த விசேட அதிரடிப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து அவர்களை புரட்டிப்போட்டு, அவர்களுடைய முதுகுகளைப் புண்ணாக்கியிருப்பார்கள் – என்றார்.

செய்திகள்