என் அக்கா ஜெயலலிதா இல்லாமல் முதல்முறை வாக்களிக்கிறேன்! சசிகலா

என் அக்கா ஜெயலலிதா இல்லாமல் முதல்முறை வாக்களிக்கிறேன்! சசிகலா

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட்ட சசிகலா, ஜெயலலிதா இல்லாமல் தனியாக வாக்களித்ததை நினைத்து கண்கலங்கி பேசியுள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வந்து வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, என் அக்கா (ஜெயலலிதா) இல்லாமல் வாக்களித்திருக்கிறேன். இதுவரையில் என் அக்காவுடன் சேர்ந்து தான் வாக்களித்திருக்கிறேன், இந்த முறை தான் தனியாக வந்து வாக்களித்துள்ளேன்.

தமிழ்நாடு மக்களுக்கு எல்லாம் தெரியும். இது தமிழக அரசு நடத்தும் தேர்தல். ஆகவே ஆளும் கட்சியினர் அராஜகம் செய்ய கூடாது.

அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டால் போதாது தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும். மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். 

இந்தியா