சிங்கள கடற்ப்படையினர் நடத்திய கோரத்தாண்டவம் (18.02.1994)

சிங்கள கடற்ப்படையினர் நடத்திய கோரத்தாண்டவம் (18.02.1994)

18.02.1994 அன்று முல்லை பூனைத் தொடுவாய் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் 10 மீனவர்கள் கொல்லப்பட்டர்​

கிளிநொச்சி  மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் அடங்கியுள்ள சுண்டிக்குளம் எனும் பிரதேசத்திலுள்ள ஒரு மீனவர் குடியிருப்பு    தொடுவை வாய்க்கால் ஆகும் .இங்கு வாழ்பவர்களது சீவனோபாயத் தொழில் மீன்பிடி ஆகும் .

18.02.1994 அன்று அதிகாலை 5.15 மணியளவில் இப்பகுதி மீனவர்கள்மீன் பிடிப்பதற்கு கட்டு மரங்களில் கடலை நோக்கி சென்று மீன்பிடித்துக் 

கொண்டிருந்தவேளை அங்குவந்தகடற்ப்படையின்  “டோறாப் படகு”மீனவர்கள் மீது திடிரெனத் துப்பாக்கிப் பிரயோகம் வேளை அங்கிருந்த மீனவர் சிலர் தப்பிச் செல்லும் நோக்கில் கட்டுமரங்களை விட்டு கடலில்  குதித்து நீந்தியவண்ணமும் மற்றவர்கள் வலைகளை அறுத்துவிட்டும் கரையை நோக்கி கட்டுமரங்களை நகர்த்திய வண்ணமும் 

இருந்தனர்  .கடற்ப்படையினரோ மீனவர்களை நோக்கி தொடர்ந்தும் துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள் .துப்பாக்கி வேட்டுக்களின் சத்தம் கரையோரக் குடியிருப்புக்களிலிருந்த அனைவருக்கும் தெளிவாக 

கேட்க தங்கள் உறவுகள்மீன்பிடிக்க சென்றதைஎண்ணிஏங்கிக் கரையை நோக்கி ஓடிவந்து அவர்கள் பார்த்தவேளை கடற்படையின்டோறாப்படகு 

கடற்கரையைஅண்மித்து வந்து மீனவர்களைச்  சுடுவதை கண்டனர் .தாக்குதலுக்கு இலக்காகி மீனவர்கள் கடல் நீரில் சேர்ந்து விழுவதை 

கண்டு மக்கள் கதறிழுதனர்.

கடற்படையின் தாக்குதலில் பத்து மீனவர்கள் கடலில் உயிரிழந்தனர் தாக்குதல்நடந்தன்றுமூன்று பேரின் உடல்களேகிடைக்கப்பெற்றன .ஏனைய ஏழுபேரது உடல்களும் மறுதினமே கரையொதுங்கியன.இந்த தாக்குதலினால்பீதியுற்ற மீனவர்கள் சில மாதங்களாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடவில்லை .இதனால் அன்றைய காலகட்டத்தில் அப்பிரதேச மீனவர்கள் மிகவும் வறுமையான நிலைக்குத் தள்ளப்பட்டனர்   

நினைவில்