யாழ் வைத்தியசாலையில் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி பலி.

யாழ் வைத்தியசாலையில் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி பலி.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்.ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த ஆருசன் தர்சிகா (வயது30) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ம் திகதி மண்ணெண்ணை குக்கரில் சமைப்பதற்காக எண்ணெயை் ஊற்றியபோது குக்கர் தீ பிடித்து எரிந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலின்றி உயிரிழந்துள்ளார். 

செய்திகள்