புத்தளத்தில்  விபத்து! காயமடைந்த இருவர் 

புத்தளத்தில் விபத்து! காயமடைந்த இருவர் 

புத்தளம் தபால் நிலைய சுற்றுவட்டத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால், குறித்த முச்சக்கர வண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன், முச்சக்கர வண்டியின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்