திடீர் நீர்வெட்டால், கொழும்பு மக்கள் திண்டாட்டம்.

திடீர் நீர்வெட்டால், கொழும்பு மக்கள் திண்டாட்டம்.

கொழும்பில் ஐந்து பிரதேசங்களில் முன்னறிவித்தல் இன்றி திடீரென நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

சுமார் 36 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (18) காலை 10 மணிமுதல் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்புக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர்குழாய் வெடித்துள்ளமையால், நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம் கொழும்பு, 1, 7, 9, 10 மற்றும் கொழும்பு 12 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது, குறைந்த அழுத்தத்துடன் கொழும்பு -8க்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

செய்திகள்