ஈழத் தமிழர்களால் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் சுபா. முத்துக்குமார்

ஈழத் தமிழர்களால் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் சுபா. முத்துக்குமார்

ஈழத் தமிழருக்கு ஆதரவாக 16 தமிழக தமிழர்கள் தீக்குளித்து மரணமடைந்தார்கள்.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் தோழர்கள் தமிழரசன், சுந்தரம், லெனின் , மாறன் போன்றவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.

தமிழக இளைஞர்கள் சிலர் ஈழம் வந்து ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள்.

அந்த சிலரில் சுபா.முத்துக்குமாரும் ஒருவர். அவருடைய தியாகம் மறக்க முடியாதது.

சுபா. முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக மட்டுமன்றி தமிழக மக்களுக்காகவும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.

•5 ஆண்டுகள் புலிகள் அமைப்புடன் சேர்ந்து தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம்.

•5 ஆண்டுகள் வீரப்பனுடன் சேர்ந்து தமிழ்நாடு விடுதலைக்கான ஆயுதப் போராட்டம்

•6 ஆண்டுகள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தமைக்காக தலைமறைவு வாழ்க்கை

•10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை

•4 ஆண்டுகளுக்கு மேலாக நாம்தமிழர் இயக்கத்தை தோற்றுவித்து அரசியல் வாழ்க்கை.

இவ்வாறு போராட்டமே வாழ்கையாக கொண்ட சுபா. முத்துக்குமாரின் 11 வது நினைவு தினம் 15.02.2022 ஆகும்.

அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக அஞ்சலியை செலுத்துவதுடன் அவரை என்றும் நன்றியுடன் நினைவு கூறுவோம்.

நினைவில்