தமிழின அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடுவோம்.

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடுவோம்.

மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனிதநேய ஈருருளிப்பயணம் 24வது தடவையாக ஐ.நா நோக்கி ஆறு ஐரோப்பிய நாடுகளூடாக பயணிக்க இருக்கின்றது.

• 16/02/2022 அன்று,
Wallington green , SM6 OTW
England ல் மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமாகி பிரித்தானியப் பிரதமர் இல்லத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தோடு தொடர்ந்து

•18.02.2022 அன்று, நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தைச் சென்றடைந்து, அங்கு 13:30 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறும்.

•21.02.2022 அன்று பெல்சியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலைச் சென்று 13:30 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்படும்.

•26.02.2022 யேர்மனி Landau நகரில் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி கவனயீர்ப்பு போராட்டத்தில் 14.30 மணிக்கு இணைந்து கொள்ளும்.

•01.03.2022 பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் , ஐரோப்பிய ஆலோசனை அவை முன்றலில் காலை 9:30 மணிக்கு நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளும்.

•07.03.2022 சுவிசில் ஐக்கிய நாடுகள் அவைமுன்றலில், ஈகைப்பேரொளி முருகதாசன் திடலைச் சென்றடைந்து,அங்கு தமிழின அழிப்புக்கு அனைத்துல விசாரணை வேண்டி நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் நிறைவடையும்.
எம்மினத்திற்கு நீதி வேண்டி உங்கள் நாடுகளூடாக பயணிக்கும் போராட்டத்துடன் நீங்களும் இணைந்திட அழைத்து நிற்கிறோம்.
* வரலாற்றுக் கடமையினை ஆற்ற வாரீர்!!

“ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துக் கட்ட முன்வர வேண்டும்”
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நிகழ்வுகள்