13 ம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக பெல்சியத்தில் தொடரும் போராட்டம்.

13 ம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக பெல்சியத்தில் தொடரும் போராட்டம்.

திட்டமிட்ட முறையிலே சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வாக அமையும் எனவும், தமிழர்கள் நாம் 13ம் திருத்தச்சட்டத்தினை அடியோடு நிராகரிக்கின்றோம் எனவும் , சிறிலங்கா அரசிற்கு விலைபோய் தமிழ்மக்களின் வாழ்வுரிமையினை விற்றுப்பிழைக்கும் தமிழினத் துரோகிகளினை அடையாளம் காண்பிக்கும் முகமாகவும்

பெல்சியத்தின் தலை நகர் புருசலில் (BRUSSEL)தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றனர். தாயகத்தில் நீறு பூத்த நெருப்பாக எம் மக்கள் அறவழியில் போராடும் வேளையில் புலம் பெயர் மக்கள் எதிர்வரும் 49வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழர்களுக்கு நீதியும் விடுதலையும் கிடைக்க போராட வேண்டிய கால கட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Uncategorized