யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 மீனவர்கள் விடுதலை

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 மீனவர்கள் விடுதலை

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 மீனவர்களில் 55 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு ஜனவரி 25 ஆம் திகதி அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நேரம் இவர்களில் 43 பேர் கோவிட் 19ன் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

இதன் காரணமாக இயக்கச்சி இடைத் தங்கல் முகாமில் பராமரிக்கப்பட்டு மீண்டும் பரிசோதனையின் பின்பு 43 பேரும் மீரியானைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அதேநேரம் எஞ்சிய 13 பேரிற்கு மேற்கொண்ட பரிசோதனையில் 4 பேர் கொவிட் 19ன் தாக்கத்திற்கு இலக்காகி உள்ளனர்.

இதனால் 13 பேரில் 9பேரும் இயக்கச்சியில் இருந்து வெளியேறிய 43 பேருமாக மொத்தம் 52 பேர் 10ஆம் திகதி இரவு நாடு திரும்பவுள்ளனர். இதேநேரம் இந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மேலும் 32 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள்