நெல்லியடி பகுதியில் மது போதையில் அட்டகாசம். ஒருவர் வைத்தியசாலையில்

நெல்லியடி பகுதியில் மது போதையில் அட்டகாசம். ஒருவர் வைத்தியசாலையில்

நெல்லியடி பகுதியில் மது போதையில் அட்டகாசம் ஒருவர் வைத்தியசாலையில் துரத்திப் பிடித்த நெல்லியடி பொலீஸார்நெல்லியடி சந்திப் பகுதியில் மது போதையில் வந்த இளைஞர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வர்த்த நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்.

அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் துரிதமாக செயற்பட்ட பொலீஸார் குறித்த இளைஞர்களை துரத்திப் பிடித்து கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.நெல்லியடி கொடிகாமம் வீதியில் இயங்கும் வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் ஒருவரே தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு காரில் வந்த இருவர் குறித்த வர்த்தக நிலையத்திற்குச் சென்று தொலைபேசிக்கு மீள் நிரப்பு செய்துள்ளனர். அதன் பின்னர் அங்கு பணிபுரியும் இன்னுமொரு ஊழியரை விசாரித்துள்ளனர். அதற்கு குறித்த நபர் இன்று விடுமுறையில் உள்ளதாக கூற அவருடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர்.

இதனை அவதானித்த உரிமையாளர் அவர்களை தடுக்க முற்பட்ட போது காரில் இருந்து மேலும் இருவர் வந்து நால்வருமாக இருவரையும் தாக்கி விட்டு காரில் தப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்து விசாரணை நடாத்திய போது, குறித்த கார் அவ்வீதியூடாக பயணித்த போது நெல்லியடி பொலீஸார் விரட்டி பிடித்து பயணித்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

செய்திகள்