வாழைச்சேனையில் வெடித்தது „காஸ்“ அடுப்பு.

வாழைச்சேனையில் வெடித்தது „காஸ்“ அடுப்பு.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை – 5 தபாலக வீதியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் நடந்த வீட்டு பெண்மணி  சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது கேஸ் சிலின்டரின் வயர் திடீரென தீப்பற்றியதையடுத்து இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

வெடிப்பின் பின்னர் கேஸ் சிலின்டர் மற்றும் கேஸ் அடுப்பின் இணைப்புக்களை அவசரமா துண்டித்ததன் காரணமாக பேராபத்தில் இருந்து தப்பிக் கொண்டதாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர். 

சம்பவம் நடந்த இடத்தை வாழைச்சேனை பொலிஸார் பார்வையிட்டதுடன்,  இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்