சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனத்தை நூதனமாக களவாடிய சென்ற திருடன்!

சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனத்தை நூதனமாக களவாடிய சென்ற திருடன்!

பஸ்யாலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த திருடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான பெஜிரோ வண்டியை திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (06-02-2022) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நிட்டம்புவ பஸ்யாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்வாறு திருடி செல்லப்பட்ட வாகனம் நிட்டம்புவ நகரில் வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரது என தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, அதிகாலை வேளை வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ள திருடன், சாவிகள் மாட்டி வைக்கும் இடத்தில் இருந்து வண்டி சாவியை எடுத்து, பெஜிரோவை கொள்ளையிட்டு சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கொள்ளை நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர். பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி சந்தேக நபர் கொழும்பு – கண்டி பிரதான வீதி ஊடாக கொழும்பு திசை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் மேலதிக விசாரணைகளை தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகள்