சிங்கள படைத் தளபதிகளை தடை செய்யுமாறு பிரித்தானியாவில் கோரிக்கை

சிங்கள படைத் தளபதிகளை தடை செய்யுமாறு பிரித்தானியாவில் கோரிக்கை

தமிழின அழிப்பில் ஈடுபட்ட  பேரினவாத   சிங்களப்படை அதிகாரிகள் மீது பிரித்தானியா அரசு தடைகளை கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானம் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள ரூட்டிங் நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 பத்து வருடங்களாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இந்த குற்றங்களில் ஈடுபட்ட படை அதிகாரிகள் மீது அனைத்துல மனித உரிமைகள் மீறல் தடைச்சட்டம் -2020 இன் அடிப்படையில் பிரித்தானியா அரசு தடையை கொண்டுவர வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்திகள்