டக்ளஸை திருப்பி அனுப்பிய மீனவர்கள்

டக்ளஸை திருப்பி அனுப்பிய மீனவர்கள்

போராட்டத்தை கைவிடுமாறு கேட்கச் சென்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மீனவர்கள் விரட்டியடித்த சம்பவம் இன்று   வடமராட்சி பகுதியில் பதிவாகியுள்ளது.கடந்த நான்கு நாளாக இந்திய மீனவர்களின் அத்து மீறலை தடைசெய்யக் கோரி மீனவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வடமராட்சி சுப்பர்மடம் மீனவர்களை

மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுள்ளார். ஆனால் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு மீனவர்கள் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்குமாறு கோரிக்கை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவ்வாறு எழுத்துமூலம் வழங்க முடியாது என அமைச்சர் தெரிவித்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மீனவர்கள்  திரும்பி அனுப்பி வைத்துள்ளனர்.

செய்திகள்