கடலில் நீராடச் சென்ற சிறுவன் பலி

கடலில் நீராடச் சென்ற சிறுவன் பலி

அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

அளுத்கம பொலிஸ் பிரிவில் மொரகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் 6 சிறுவர்கள் கடலில் நீராடச் சென்ற போது , நீரிழில் மூழ்கியுள்ளனர்.

இதன் போது பிரதேச மக்களால் ஐந்து சிறுவர்கள் மீட்க்கப்பட்ட போதிலும், ஒருவர் மாத்திரம் காணாமல் போயுள்ளார். பின்னர் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் 16 வயதுடைய களுவாமோதர , அழுத்கம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

அளுத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

செய்திகள்