நெதர்லாந்தில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின்  நினைவெழுச்சி நாள்.

நெதர்லாந்தில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவெழுச்சி நாள்.

நெதர்லாந்தில் 30-01-2022 ஞாயிறு இலங்கை இந்தியக் கூட்டுச் சதியினால் வங்கக் கடலில் வீர காவியமான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீர வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு அல்மேரா பிரதேசத்தில் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. சுமார் 11.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடறேற்ல், மலர்வணக்கம், அகவணக்கம் ஆகிய ஆரம்ப நிகழ்வுகளுடன் அமைதியான முறையில் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்துலகத் தொடர்பகத்துடனான மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது.          
இன்றைய கொரோனா சூழ்நிலையில் குறைந்த அளவிலான மக்கள் கலந்துகொண்டாலும் ஆக்கபூர்வமான கேள்வி பதிலாகவும் சந்தேகங்கள் தீர்ந்து தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வு சார்ந்த கலந்துரையாடலாகவும் இந்தச்சந்திப்பு அமைந்திருந்தது. பின் கடந்த ஆண்டின் வரவு செலவு அறிக்கை மக்கள் பார்வைக்காக ஒளித்திரையில் காட்டப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டது. இறுதியில் சுமார் 16.00 மணியளவில் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உரிமைக்குரலுடன் இனிதே நிறைவெய்தியது.

நினைவில் மாவீரர்கள்